குற்றச் செயல்களை தடுக்க பொதுமக்களும் காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ; காவல்துறை உயர் அதிகாரி வேண்டுகோள் ;

 

  -MMH

   பொள்ளாச்சி நகரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நகரில் முக்கிய இடங்களில் போலீசார் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள்பொருத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நகரின் முக்கிய இடமாக விளங்கும் மகாலிங்கபுரம் பகுதியில் திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், முக்கிய வீதிகளில் 16 கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரால் பொருத்தப்பட்டன. 

மகாலிங்கபுரம்போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையில் அதன் செயல்பாட்டை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், பொள்ளாச்சி துணைசூப்பிரண்டு தமிழ்மணி முன்னிலையில், தொடங்கி  வைத்தார். முன்னதாகதுணை சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். 

பின்னர்  போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-

"பொள்ளாச்சி பகுதியில் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடுகள், தெருக்கள், தொழில் நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 

இதன்மூலம் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறையும். சந்தேகப்படும் படியானஆட்கள் நடமாட்டம் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை பொதுமக்கள் வைக்கவேண்டாம். வங்கி லாக்கரில் வைத்து தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்." இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments