சிங்கம்புணரி அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! சீரழித்த காமுகர்கள் இருவர் கைது!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகிலுள்ள சூரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவரை, அதே பகுதியைச் சேர்ந்த கணபதி (வயது 28) என்பவரும், ஆறுகுடிப்பட்டியை சேர்ந்த பிரபு(35) என்பவரும் கடந்த நான்கு மாதங்களாக பிரியாணி மற்றும் மது வாங்கி கொடுத்து, சூரக்குடியில் உள்ள பழைய அடைக்கப்பன் தியேட்டர் அருகே உள்ள ஒரு வீட்டில் வைத்து தனித் தனியாக பல முறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பாதிப்படைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்  பேரில் பாலியல் பலாத்காரம் செய்த கணபதி மற்றும் பிரபு இருவரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments