திருப்பத்தூர் அருகே 17 மயில்கள் வேட்டை! இருவர் கைது!

-MMH

         சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி மற்றும் இளையாத்தங்குடி பகுதிகளில் தீபாவளி விருந்திற்காக மயில்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் வனத்துறையினர், வாகன சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சாக்குப் பைகளுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்த போது மயில்களை வேட்டையாடி அவற்றின் இறகுகளை நீக்கி சாக்குப் பைகளுக்குள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


விசாரணையில், அவர்கள் இருவரும் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ராஜா (35) மற்றும் தியாகராஜன் (32) எனத் தெரியவந்தது. அவர்களிடமிருந்து இறந்த நிலையில் 17 மயில்கள், வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த திருப்பத்தூர் வனத்துறையினர், அவர்களைக் கைது செய்து சிவகங்கை சிறையில் அடைத்தனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments