கோவை அருகே ஒரே கிராமத்தில், 25 பேருக்கு, தொற்று உறுதியானதால், கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டது !!

 

-MMH

     கோவை மாவட்டம், அன்னூர் அருகே, சொக்கட்டாம் பள்ளி கிராமம் உள்ளது. இங்கு 6ம் தேதி நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.இதில் 7ம் தேதி ஒன்பது பேருக்கும், நேற்று 12 பேருக்கும் தொற்று உறுதியானது. சிறிய கிராமத்தில் மூன்று நாட்களில், 25 பேருக்கு தொற்று உறுதியானதால், அங்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டனர்.

கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. கிராமத்தின் நான்கு வழிகளும் அடைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. கிராம மக்களிடம் ஐந்து நாட்களுக்கு வெளியே வரக் கூடாது எனவும், மற்ற பகுதி மக்கள் அந்த கிராமத்திற்குள் ஐந்து நாட்களுக்கு செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

ஒரே கிராமத்தில், 25 பேருக்கு, தொற்று உறுதியானதால், கிராமத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.கோவை மாவட்டம், அன்னூர் அருகே, சொக்கட்டாம் பள்ளி கிராமம் உள்ளது.

-சுரேந்தர். 

Comments