கிருங்காக்கோட்டையில் வ.உ.சி.யின் 85ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி!

   -MMH 

  அடிமை இந்தியாவில் ஆங்கிலேயரால் விதிக்கப்பட்ட சுங்க வரியை எதிர்த்து, ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டியதால் 'கப்பலோட்டிய தமிழன்' என்றழைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் 85ஆவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையிலும் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் சார்பில் வ.உ.சி.யின் நினைவு நாள் கடைபிடிக்கபட்டது.

வ.உ.சி கலைமன்றத்தில் நடந்தேறிய இந்நிகழ்வில் கர்ணன், கிருங்கை செல்வம், அன்புச்செழியன், வ.உ.சி மன்றம் ராசகுரு, எழுத்தாளர் கிருங்கை சேதுபதி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் புகழ் வணக்க முழக்கங்களையும் எழுப்பினர்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments