அம்மாப்பேட்டை பகுதியில் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்த நெல் வயல்களை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு!!

    -MMH 

அம்மாப்பேட்டை ஒன்றியம் புத்தூர் வருவாய் கிராமம் மற்றும் அம்மாப்பேட்டை பேரூர் பகுதியில் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்த நெல் வயல்களை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் கலைச்செல்வன், அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தியாக சுரேஷ், அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மைதீன், 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து அம்மாப்பேட்டையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

-ருசி மைதீன், தஞ்சாவூர்.

Comments