இன்றைய ஸ்பெஷல் மஷ்ரூம் மட்டர் மசாலா எப்படி செய்வது.!!

 

-MMH 

 தேவையான பொருள்கள் :        

மஷ்ரூம் - ஒரு கப், Frozen பட்டாணி - அரை கப், சீரகம் - கால் தேக்கரண்டி, வெங்காயம் - ஒன்று, தக்காளி - இரண்டு, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி, தனியா தூள் - ஒரு தேக்கரண்டி, சீரக தூள் - ஒரு தேக்கரண்டி, முந்திரி விழுது - கால் கப், கசூரி மேத்தி - சிறிது, பட்டை - ஒரு சிறு துண்டு, லவங்கம் - 2, பிரிஞ்சி இலை - ஒன்று, உப்பு மற்றும் எண்ணெய் - தேவைக்கேற்ப.     

செய்முறை :

         மஷ்ரூமை சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். பட்டாணியை கழுவி வைத்துக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பின், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.தக்காளி வதங்கியதும் அதில் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.மஷ்ரூம், தக்காளி வதங்கியதும் பட்டாணி போட்டு அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து கிளறவும்.இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, உப்பு காரம் சரிபார்த்துக் கொள்ளவும்.பின்னர் இதனை மூடி வேக வைக்கவும். 5 முதல் 10 நிமிடங்களில் மஷ்ரூமும், பட்டாணியும் வெந்துவிடும்.இதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது சேர்க்கவும். முந்திரி விழுது சேர்த்ததும் மசாலா கெட்டியாகும்.பின்னர் கசூரி மேத்தியை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.சிறிது கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறலாம்.சுவையான மஷ்ரூம் மட்டர் மசாலா தயார். இது புலாவ் வகைகள், சப்பாத்தி மற்றும் நாண் போன்றவைகளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். 

-கோவை செஃப்.   

Comments