மருதமலை ஸ்ரீ அருள்மிகு வள்ளியம்மன் திருக்கோவிலில் ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழா !!

   -MMH 

  கோவை மருதமலை ஸ்ரீ அருள்மிகு வள்ளியம்மன் திருக்கோவிலில் ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அருள்மிகு வள்ளியம்மன் திருக்கோவில். இக்கோவிலின் 5 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா ஸ்ரீ  வள்ளியம்மன் அறக்கட்டளை நிறுவனர் அன்பு தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதனை ஒட்டி ஸ்ரீ வள்ளி அம்மனுக்கு த்ரவ்ய அபிசேகம் மற்றும் 108 கலாசாபிசேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இக் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி பல்வேறு வகையான மலர்களை கொண்டு ஸ்ரீவள்ளி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments