சண்முகநதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!

   -MMH 

  பழனியில் தொடர்ந்து 5 மணி நேரம் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. வரதமாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து 670 கனஅடி தண்ணீரும், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து 705 கன அடி தண்ணீரும் சண்முகநதி ஆற்றில் வெளியேற்றம். தொடர்ந்து மழை பெய்தால் கூடுதல் தண்ணீர் சண்முகநதி ஆற்றில் வெளியேற்றப்படும் என்பதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பழனியில் இருந்து மானூர் , கீரனூர்,  கல்த்துறை வழியாக தாராபுரம் வரை செல்லக்கூடிய சண்முகநதி ஆற்றங்கரையில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றங்கரைக்கு ஆடு மாடுகளை மேய்க்க செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments