கோவை மனித நேய ஜனநாயககட்சியின் கோவை மாவட்ட இளைஞரணி ஆலோசனை கூட்டம்!!

    -MMH 

கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அன்சர் அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிற் சங்கத்தின் மாநில செயலாளர் M.H. ஜாஃபர் அலி, IKP மாநிலச் செயலாளர் லேனா இஷாக், மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ் ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர் அணி வளர்ச்சி குறித்தும், நிர்வாகக் கட்டமைப்பு குறித்தும், இளைஞரணி பணிகளை குறித்தும், புதிய இளைஞர் அணி நிர்வாகம் அமைப்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்

இந்நிகழ்வில் விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், IKP மாவட்டச் செயலாளர் ஹனீப், இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்கள் பைசல், சதாம், செய்யது,  தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஷாஜகான்,  மாவட்ட பொருளாளர் ரியாசுதீன், மாவட்ட துணை செயலாளர் பயாஸ்,  ஷாஜகான், மாவட்ட துணை  இளைஞரணி பகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளைஞரனி மாவட்ட பொருளாளராக சகோதரர் பைசல் தேர்வுசெய்யப்பட்டார் 

கோவை சின்மயா ஸ்கூலில் படித்த மாணவி பொன் தாரனியின் தற்கொலைக்கு காரனமான பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பபட்படது போல் தலைமை ஆசிரியரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இரண்டு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது!இறுதியாக புதிய பொருளாளர் பைசல் நன்றி கூறி கூட்டம் நிறைவு பெற்றது!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments