வால்பாறையில் பயனற்று கிடக்கும் தங்கும் விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா! பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

 

-MMH

      வால்பாறையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த10 ஆண்டுகளுக்கு முன்னால் புதிய பஸ்நிலையம் பகுதியில் நகராட்சி வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிகவளாகத்தின் கீழ் தலத்தில் 20 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் வந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த வணிக வளாகத்தின் மேல் பகுதியில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டது. 

ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு வராத நிலை உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறியதாவது:

வால்பாறைக்கு  நள்ளிரவில் பஸ்சி்ல் வரக்கூடியவர்கள் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் போது வனவிலங்குகளிடம் சிக்கி கொள்ள வாய்ப்பு உள்ளதால் குறைந்த வாடகையில் தங்கிவிட்டு செல்லட்டும் என்ற நோக்கில் 6 அறைகள் கொண்ட தங்கும் விடுதி கட்டப்பட்டது. 

ஆனால் இந்த தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகி விட்ட நிலையில் இந்த அறைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்தும் இதுவரை யாரும் தங்கவில்லை. இந்த தங்கும் விடுதி பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. வால்பாறை பகுதியை பொறுத்தவரை நவம்பர் மாதம் முதல் வருகின்ற ஆண்டு ஜூன் மாதம் வரை அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய காலமாகும். 

எனவே பயனற்று கிடக்கும் தங்கும் விடுதியை உரிய பராமரிப்பு செய்து வாடகைக்கு விட்டால் நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கும்.  இரவு நேரத்தில் வரக்கூடிய எஸ்டேட் பகுதி மக்களுக்கு பயனுள்ளதாகவும் அமையும். எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பயனற்று நிலையில் இருக்கும் நகராட்சி தங்கும் விடுதி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-S.ராஜேந்திரன். திவ்யாகுமார் வால்பாறை.

Comments