கோவையில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் மாநாடு!!

   -MMH 

  கோவை: இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் தென்னிந்திய அலுவலகம் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கோவை " லி மெரிடியனில் " இரண்டு நாட்கள் பட்டயக் மாநாட்டினை நடத்துகிறது. இந்திய கணக்காளர்கள் நிறுவனத்தின் கோவை கிளை இம்மாநாட்டினை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இம்மாநாடு இணையவழி மூலமாகவும் நேரடியாகவும் இது நடைபெறவிருக்கிறது.

எஸ். ஐ. ஆர். சி. யின் ஐம்பத்து மூன்றாவது மாநாடு குறித்து கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இம்மாநாடு குறித்து தமிழ்நாட்டின் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் நவம்பர் 19 ஆம் தேதியன்று காலை 09: 30 மணிக்கு இணைய வழியே இம்மாநாட்டை துவக்கி வைக்கிறார். இம்மாநாட்டின் ( நேரடி நிகழ்வு ) சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டின் அமைச்சர் மாண்புமிகு முனைவர். பழனிவேல் தியாகராஜன் , அவர்கள் கலந்து கொண்டு , மாநாட்டினை துவக்கி வைத்து உரையாற்றுகிறார். என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மாநாட்டின் தொடக்க விழாவில் முக்கிய விருந்தினர்களாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் சிஏ நிஹார் என். ஜம்புசாரியா அவர்களும் ஐசிஏஐ'யின் முன்னாள் சிஏ. ஜி. இராமசாமி அவர்களும் கலந்து கொள்கின்றனர். எஸ். ஐ. ஆர். சி. யின் எழுபதாவது ஆண்டில் நடைபெறவிருக்கும் 5000 த்துக்கும் மேற்பட்ட இம்மாநாட்டில் பட்டயக் கணக்காளர்கள் இணையவழியாகவும் 750 க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் நேரடியாகவும் கலந்து கொள்கின்றனர். இதுவரை கோவையில் இதுபோன்ற ஏழு மாநாடுகள் நடைபெற்று இருக்கின்றன , இந்த மாநாடு இணையவழியாகவும் முறையாக நடைபெறுகிறது. மட்டுமே முதல் நேரடியாகவும் நடைபெறும் நிறுவனத்தின் பத்தாண்டுகளுக்கு பிறகு கோவையில் இம்மாநாட்டில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் மத்தியக்குழு உறுப்பினர்கள் ,. தென்மண்டல நிர்வாகக்குழு உறுப்பினர்கள் , ஐசிஏஐயின் முன்னாள் தலைவர்கள் , உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பட்டயக் கணக்காளர்கள் உரையாற்றுகின்றனர். வாழும் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் , கே. எம். சி. எச். மருத்துவமனையின் டாக்டர் பழனிச்சாமி மற்றும் பலர் உரையாற்றுகின்றனர். கலை " அருண் என். " வித்தகம் " என்னும் கருப்பொருளில் நடைபெறவிருக்கும் தணிக்கைத்துறையில் இம்மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் , நிகழ்ந்துவரும் வளர்ச்சிகள் குறித்த மிகமுக்கியமான பொருட்களில் " உரையாற்றுகின்றனர். நேரடி வரிகள் , ஜிஎஸ்டி , தணிக்கையியல் , பொருளாதார , தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு தலைப்புகளில் நாட்டின் தலைச்சிறந்த ஆளுமைகள் பேசுகின்றனர்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இம்மாநாட்டினை எஸ். ஐ. ஆர். சியின் தலைவர் சிஏ. கே. ஜலபதி , ஐசிஏஐயின் கோவை கிளை தலைவர் சிஏ. எஸ். பிரபு , செயலாளர் சிஏ. டி. நாககுமார் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் இணைந்து நடத்துகின்றனர். இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் ( ஐசிஏஐ ) இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் ( ஐசிஏஐ ) , இந்தியாவில் பட்டயக் கணக்காளர்கள் தொழிலை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திற்காக 1949 ஆம் ஆண்டு இந்திய பட்டயக் கணக்காளர்கள் சட்டம் ( 1949 ஆம் ஆண்டின் சட்டம் எண். 1949 ) கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பாகும். ஐசிஏஐ அதன் 72 ஆண்டு கால இருப்பின் போது கல்வி , தொழில்துறை வளர்ச்சி , உயர் தணிக்கை கணக்கியல் மற்றும் நெறிமுறை பராமரிப்பு , தரநிலைகள் ஆகிய துறைகளில் அதன் பங்களிப்புகாக , நாட்டில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் ஒரு முதன்மையான கணக்கியல் அமைப்பாக ஓர் அங்கீகாரத்தை அடைந்துள்ளது. ஐசிஏஐ இன்று உலகம் முழுவதிலும் இரண்டாவது பெரிய கணக்கியல் அமைப்பாகும். ஐசிஏஐ ஐந்து பிராந்திய அலுவலகங்கள் , தெற்கு , மேற்கு கிழக்கு , மத்திய மற்றும் வடக்கு முறையே சென்னை , மும்பை , கொல்கத்தா , கான்பூர் மற்றும் புது தில்லி தலைமையகத்தோடு இந்தியாவில் 164 கிளைகள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் 44 கிளைகளோடு இயங்கி வருகிறது. தற்போது சுமார் 3, 00, 000 க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் மற்றும் 10, 00, 000 க்கும் மேற்பட்ட இயங்கிவருகிறது. மாணவர்களோடு ஐசிஏஐ'யின் தென்மண்டல அலுவலகம் ( எஸ். ஐஆர். சி ) பிராந்திய அலுவலகம் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தமிழ்நாடு , ஆந்திரப் பிரதேசம் , கர்நாடகா , கேரளா , தெலங்கானா தீவுகளின் மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி மற்றும் லக்ஷதீப் பட்டயக் கணக்காளர்களுக்கான தென்மண்டல தலைமை அலுவலகம். மேற்குறிபிட்ட மாநிலங்களில் 45 க்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களோடு இயங்கிவருகிறது. எஸ். ஐ. ஆர். சியில் தற்போது சுமார் 64, 000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் சுமார் 3. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments