சமூகப்பணியில் கோவை மாவட்ட மாநகர காவல்!! நல்லதோர் முன்னுதாரணம் என்று மக்கள் பாராட்டு!!

 -MMH

மழை காலம், கனமழை எதிரொலி அணைகள் நிரம்பி உடையும் அபாயம், சாலை எங்கும் வெள்ளம், வீடுகளில் மழைநீர் போன்ற இயற்கை ஏற்படுத்திய இந்த இன்னல்களை நாம் சில நாட்களாகவே பார்த்து வருகின்றோம். கோவை மாவட்டத்திலும் கனமழை எதிரொலி காரணமாக ஆங்காங்கே இதுபோன்ற மழை நீர் தேக்கங்கள், சாலை பள்ளங்களில் நீர் தேங்குதல், மேம்பாலங்கள் இன் அடியில் தண்ணீர் நிரம்பியது போன்ற பிரச்சினைகள் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இதனால் மக்கள் , மற்றும் சமூக ஆர்வலர்கள் இதற்கு தீர்வு வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இதன் விளைவாக இதனை கருத்தில் எடுத்துக் கொண்ட கோவை மாவட்ட காவல்துறை கோவை மாநகராட்சியுடன் இணைந்து மழைநீரால் பழுதடைந்த சாலைகள் , மழை நீர் தேங்கியுள்ள மேம்பாலங்கள் போன்றவற்றை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.

காட்டூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட எல்லையில் சேதமடைந்த சாலைகளை காவலர்கள் சீர் செய்தனர் , உப்பிலிபாளையம் மேம்பாலத்துக்கு அடியே தேங்கியிருந்த நீரையும் மாநகராட்சி உதவியோடு சரி செய்தது காவல்துறை இதுபோன்று கிக்கானி மேம்பாலம் அருகே யும் சாலை சரி செய்யப்பட்டு போக்குவரத்துக்கு வழி செய்யப்பட்டது, இதுபோன்று இன்னும் கோவை மாவட்டங்களில் பல இடங்களில் காவல்துறையினர் மாநகராட்சியுடன் சேர்ந்து பணியினைத் தொடர்ந்து வருகின்றனர். 

கோவை மாவட்ட காவல் துறையின் இந்த செயல் மக்களிடையே காவலர்களுக்கு பெரும் நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெற்று தந்துள்ளது. இது ஒரு நல்ல முன்னுதாரணம் என்று மக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

 -ஈசா, சாதிக் அலி.

Comments