கோவை மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!

   -MMH 

    கோவை மாநகர காவல் ஆணையர் திரு பிரதீப் குமார் இ கா பா அவர்கள்  தலைமையில் நேற்று 25-11-2021- ம் தேதி அனைத்து துணை ஆணையர்கள் காவல் சரக உதவி ஆணையர்கள். மற்றும் சிறப்பு பிரிவு உதவி ஆணையர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. 

இதில் கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கைப் பேணி காப்பதில் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்கவும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள். கந்துவட்டி வசூலிப்பவர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள்.  ரவுடிசம் செய்பவர்கள். மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும்.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை. பான் மசாலா. பொருட்கள் மீதும் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும்   சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்கள் மீதும் ஒருங்கிணைந்து சூதாட்டம் நடத்துபவர்கள் மீதும்  ஒருங்கிணைந்து விபச்சாரம் செய்பவர்கள் மீதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் அனைத்து காவல் துறையினரும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள். சைபர் குற்றங்கள். போக்குவரத்து  பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள்மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

காவல்நிலையங்களுக்கு  புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் உடனுக்குடன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் அனைத்து காவல் ஆயவாளர்கள்.உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ரோந்து செல்லும் போது காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் காவல் ஆணையர் திரு பிரதீப் குமார் இ கா பா அவர்கள் கூறினார்கள்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments