சிங்கம்புணரியில் நாளை மின் தடை! உதவி செயற்பொறியாளர் தகவல்!!

       -MMH 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி துணைமின் நிலைய தடத்தில் சில பகுதிகளில் நாளை (08-11-2021) புதிதாக உயர் அழுத்த மின்பாதைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் சிங்கம்புணரி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. 

எனவே, பராமரிப்புப் பணியின்போது சிங்கம்புணரி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான சிங்கம்புணரி நகர், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி, செருதப்பட்டி, அரசினம்பட்டி, குமரிபட்டி, நாட்டார்மங்கலம், அ.காளாப்பூர், சதுர்வேதமங்கலம், கண்ணமங்கலப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (08.11.2021 அன்று) காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை மின்விநியோகம் இருக்காது என  சிங்கம்புணரி உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments