கோவை மாவட்டத்தில் நேற்று பரவலாக கன மழை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது!! வாகன ஓட்டிகள் தடுமாற்றம்! !

   -MMH 

  கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு ஒரு மணி நேரத்துக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

உப்பிலிபாளையம், வடகோவை, லங்கா கார்னர் பகுதிகளில் உள்ள பாலங்களில் தண்ணீர் தேங்கியது.உக்கடம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி, காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், திருச்சி சாலை, சரவணம்பட்டி, கணபதி மாநகர், பீளமேடு, உட்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சரவணம்பட்டி, அம்மன் கோவில், சிதம்பரம் நகர் பகுதியில், மழைநீர் செல்ல வழியில்லாமல், வீடுகளுக்குள் நுழைந்து தேங்கி நின்றது.உக்கடம் பகுதியில், 50 ஆண்டுகள் பழமையான மரம் வேருடன் சரிந்ததில், நான்கு, இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

மேலும் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments