கோவை மாநகர காவல் ஆணையர் தலைமையில் போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை!!

 -MMH 

 கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல் துணை ஆணையர் போக்குவரத்து, காவல் உதவி ஆணையர்கள் போக்குவரத்து, காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் ஆகியோருடன்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அவர்களுடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சாலை விபத்து அதிகம் நடைப்பெறும் பகுதிகளைக் கண்டறிந்து, விபத்தை தவிர்ப்பதற்கான தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறையினருடன் இணைந்து செயல் படுத்தவும்,சாலை விபத்தை குறைக்கும் விதமாக, போக்குவரத்து விதிமீறல் செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், மேலும் கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் வேகக்கட்டுப்பாட்டு கான எச்சரிக்கை பலகை வைக்கவும், முக்கிய சிக்னல்களில் வேகக்கட்டுப்பாட்டு கான டிஜிட்டல் பலகை வைக்கவும் அறிவுறுத்தினார்.

 அனைத்து போக்குவரத்து  ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும், ஆட்டோ  டாக்ஸி, மேக்ஸி கேப், லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் இடையே சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசு பேருந்து ஓட்டுனர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.

 போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர்கள் விபத்து வழக்குகளில் துரித நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும், விபத்து நடந்த பகுதிகளில் ஆய்வு செய்து விபத்திற்கான காரணங்களை கண்டறிந்து மேலும் அப்பகுதியில் விபத்து நடக்கா வண்ணம் கட்டமைப்பு வசதிகள், எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments