சளி தொல்லையை விரட்டும் சூப்பரான வைத்தியம்!!
சளி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி வரக் கூடிய ஒன்று தான். பருவநிலை மாற்றத்தால் இது அடிக்கடி இது வர தோன்றும்.
இந்த சமயங்களில் அடிக்கடி மருத்துமனை தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்து கூட எளிய முறையில் தீர்வு காண முடியும். தற்போது சளி தொல்லையை விரட்டும் சூப்பரான வைத்தியம் ஒன்றை இங்கு பார்ப்போம்.
தேவையானவை:
வெற்றிலை,
கற்பூரவள்ளி,
மிளகு.
செய்முறை:
1 வெற்றிலை நன்றாக வெட்டி ஒரு பாத்திரத்தில் 100ml தண்ணீர் எடுத்து கற்பூரவள்ளியுடன் கொதிக்க வைத்து கொள்ளவும்.
பிறகு 10 மிளகு பொடி பண்ணி எடுத்து நன்றாக கொதிக்க வைத்து வடிக்கடி எடுத்து கொள்ளவும்.
100ml தண்ணீர் 50ml வரும் வரை கொதிக்க வைத்து எடுக்கவும். தினமும் காலை சாப்பிட்டு பின் ஒரு தடவையும் இரவு தூங்குமுன் ஒரு தடவையும் குடித்து வரவும். இது ஒன்று இரண்டு நாட்களில் நல்ல பயன் கிடைக்கும். குழந்தைகளுக்கு 10ml அளவு கொடுக்கலாம்.
-சுரேந்தர்.
Comments