நொய்யல் ஆற்றிற்கு மலர்தூவி வரவேற்ற கோவை மக்கள்!!

  -MMH

   கோவை மண்ணை குளிர செய்த வரலாற்று சிறப்புபெற்ற இந்த நொய்யல் அன்னைக்கு தன்னார்வலர்கள் சார்பில், மலர்த்தூவி நன்றி கூறும் நிகழ்ச்சி பேரூர் அருகே நொய்யல் படித்துறையில் நடந்தது.

கோவையின் ஜீவநதியாக நொய்யல் ஆறு விளங்குகிறது. நொய்யல் ஆறு கோவையில் இருந்து பல 100 கிலோ மீட்டர் பயணித்து, திருப்பூர் சென்று, அங்கிருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள காவேரி ஆற்றில் கலக்கிறது. இவ்வாறு நீண்ட தூரம் பயணிக்கும் நொய்யல் ஆறு, கோவையின் நீர் ஆதாரமாக விளங்கும் 25 குளங்களை நிரப்புகிறது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குளங்கள் புறநகர் பகுதி குளங்கள் என மொத்தம் 25 குளங்களில் நிரப்பப்படும் தண்ணீர், கோவை மாவட்டத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும்,

கோவை புறநகர் பகுதி விவசாய பாசனத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், கோவை மண்ணை குளிர செய்த வரலாற்று சிறப்புபெற்ற இந்த நொய்யல் அன்னைக்கு தன்னார்வலர்கள் சார்பில், மலர்த்தூவி நன்றி கூறும் நிகழ்ச்சி பேரூர் அருகே நொய்யல் படித்துறையில் நேற்று நடந்தது.

இதில், அனிச்சம், ஆம்பல், வெட்சி, கரந்தை. நொச்சி, வாகை, தும்பை, துளசி, தென்னம்பூ, வாழைப்பூ, கோரை, தேமாம்பூ, செம்மணி, ஊமத்தை, பூவரசு உள்ளிட்ட 218 வகையான மலர்களை கொண்டு, செந்தமிழில் வாழ்த்து பாடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, நொய்யல் அன்னைக்கு நன்றி தெரிவித்தும், ஆற்று நீருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாகவும் இந்த நிகழ்வு நடந்தது. இதில், திரளான தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு, நொய்யல் அன்னையை மலர்தூவி வணங்கி மகிழ்ந்தனர்

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments