உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது!!
கோவை: உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, நேரு நகர் லயன்ஸ் சங்கம், ஸ்ரீ ஐஸ்வர்யா ஹாஸ்பிடல் சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நேரு நகர் ஹவுசிங் யூனிட் சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு நேரு நகர் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் ச. செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் லயன் ஏ.முகம்மது ஷேமீக், பொருளாளர் லயன் ஹரிஷ் பாஸ்கர், சர்க்கரை நோய் மாவட்ட தலைவர் டாக்டர் டி. பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமினை லயன்ஸ் மாவட்ட ஆளுநர் நடராஜன், சுதந்திர தின விழிப்புணர்வு மாவட்ட தலைவர் லயன் ஆர். காளியப்பன், நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சீதாலட்சுமி, லயன்ஸ் மாவட்ட முதல் பெண்மணி திருமதி. கலாமணி நடராஜன், முன்னாள் தலைவர் நந்தகுமார் 36-வது வார்டு அ.தி.முக. செயலாளர் குபேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முகாமானது காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சர்க்கரை நோய் பரிசோதனையை செய்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சங்க மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments