கோவையில் நெடுஞ்சாலைத் துறை உதவியுடன் சாலையை சீரமைத்த ம.ஜ.க.வினர்!

 

-MMH

     கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலப் பணிகள்  நடைபெற்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில். மழையும் விடாமல் பெய்து வந்ததால் அந்த சாலைகள் மேலும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அதை தொடர்ந்து நேற்று 8.11.21 மாலை மனிதநேய ஜனநாயக கட்சி  மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், AE ஆகியோர்  உதவியுடன் மஜக நிர்வாகிகள் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்தனர். இந்தப் பணியை செய்த அனைவர்களுக்கும் அந்த பகுதி உள்ள மக்களும் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து காவல் துறையும் நன்றிகளையும் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

இப்பணியில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில செயலாளர் லேனா இசாக், மருத்துவ அணி மாநில துணைச்செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், சிராஜுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments