வால்பாறை பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ! சந்தைக்கு பொருள்கள் வாங்க வந்தவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் !!

   -MMH 

   வால்பாறையில் 8-வது மெகா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று பயணிகள் நிழற்குடை, எஸ்டேட் ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள் உட்பட 50 மையங்களில் நடைபெற்றது. 

இதில் காந்தி சிலை பஸ்நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையம் அதிக வரவேற்பை பெற்றது. எஸ்டேட் பகுதியில் இருந்து வந்தவர்கள் நேற்று சந்தை நாளாக இருந்ததால் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக்கொண்டு தடுப்பூசியையும் போட்டுச் சென்றனர்.

வால்பாறையில் நேற்று மாலை 4.30 மணிவரை 1000 பேர் தடுப்பூசி போட்டிருந்த நிலையில் காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் மட்டும் 140 பேர் தடுப்பூசி போட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆணையாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் எஸ்டேட் எஸ்டேட்டாக ஒலி பெருக்கி மூலம் சிறப்பு அறிவிப்பு செய்யப்பட்டது. 

தடுப்பூசி போடுவதற்கான விரிவான ஏற்பாடுகளை வால்பாறை, முடீஸ், சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுலட்சுமண் மற்றும் மருத்துவ குழுவினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-S.ராஜேந்திரன்,  திவ்யாகுமார் (வால்பாறை).

Comments