சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் விவசாயிகள், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மரக்கன்றுகள் தயார்! வனத்துறை தகவல்!

     -MMH 

   சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றிய விவசாயிகள், பொதுமக்கள், அரசு நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் தயாராக உள்ளதாக மாவட்ட வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி அவர்களால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நாற்றுகள் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்ட வனத்துறை மூலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிரந்தர நாற்றாங்கால் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட தேசிய ரூர்பன் திட்டம் நாற்றுகள் வளர்க்கப்படுகிறது.

சிவகங்கை, அரசு நாற்றங்கால் பண்ணையில் பல இன  மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. இவை மக்களுக்கு குறைந்த விலையில் தரப்படுமென வனத்துறையினர் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையில் மகிழம், வேங்கை, மகாகனி, மந்தாரை, இலுப்பை, செண்பகம், அரசு, ஆலமரம், வேம்பு, புங்கன், பலா, நெல்லி, தேக்கு, செம்மரம், பாதாம், ஆல்கொன்றை, சரக்கொன்றை, அத்தி, இலுப்பை, புளி, கொடுக்காப்புளி, நாவல், அரசு மயிற்கொன்றை, ஈட்டி, சொர்க்கம், இலைபுரசு, நீர்மருது, பூவரசு, சிசு, மலை வேம்பு, ஆணைகுண்டுமணி, நாட்டுவாகை, உசில், மூங்கில், வில்வம், ஆவி, இயல்வாகை, தூங்குமூஞ்சிவாகை, மஹோகனி, குமிழ், ஸ்பெத்தோடியா மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன.

சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றிய  பொதுமக்கள் தங்கள் வீடுகள், பண்ணைகளில் வளர்க்க குறைந்த விலைக்கு இவை விற்கப்படும். இவற்றை விரும்புவோர் பெற்றுக்கொள்ளலாமென வனத்துறையினர் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் மதிவாணன் அவர்களின் தொலைபேசி எண்ணில் (8870931726) தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைக் கேட்டறியலாம்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments