கோவை - அவிநாசி சாலையில் கனமழையால் மரம் விழுந்து விபத்து!!

 

-MMH

    கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் சமுதாயக்கூட வளாகத்தில் இருந்த 20 ஆண்டுகள் பழமையான பூவன் மரம் ஒன்று கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்தது. கோவையில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனிடையே கோவை-அவினாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் சமுதாயக்கூட வளாகத்தில் 20 ஆண்டுகள் பழமையான பூவன் மரம் ஒன்று கனமழையால் வேரோடு சாய்ந்து அவினாசி சாலையில் விழுந்தது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் அதிகாலை நேரம் என்பதால், ஆள் நடமாட்டம் இல்லை இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் பொக்லைன் உதவியுடன் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments