குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

   -MMH 

  கோவை கணபதி அருகே குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி! அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சம்!!

கோவை கணபதி எப்.சி.ஐ.ரோடு பல ஆண்டுகளாக சாலை பராமரிப்பு இல்லாததால் பெரிய குண்டும் குழியும்மாக உள்ளன. இந்த சூழ்நிலையில் கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருப்பதால் அந்த சாலைகளில்  தண்ணீர் நிரம்பி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. 

மேலும் பல இடங்களில் குளம்போன்று தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் சாலைகளில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால்  அடிக்கடி விபத்து நடந்து வரும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments