சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என்று கூறி காவல் துறையினர் அறிவுரை!!

 -MMH

பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் ஜோதி நகரில் உள்ள ருக்குமணியம்மாள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெப்லா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் தலைமை காவலர் சுமீதா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 முன்னதாக நிகழ்ச்சியில் போலீசார் பேசும்போது கூறியதாவது:-

மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும். பள்ளி பருவத்தில் வருவது காதல் அல்ல. அது ஒருவித ஈர்ப்பு தான் என்பதை மாணவ-மாணவிகள் உணர வேண்டும். 

குழந்தை திருமணத்தால் பெண்களின் வாழ்க்கை கேள்விகுறியாகி விடும். 18 வயது முடிந்த பிறகு தான் திருமணம் செய்ய வேண் டும். பெற்றோர் குழந்தைகளிடம் பாதுகாப்பான, பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து தெரியப்படுத்த வேண்டும். 

மாணவிகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதி வேற்றம் செய்யக்கூடாது. அதுபோன்று சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு செல்போன் எண்களை எக்காரணத்தைக்கொண்டும் கொடுக்கக்கூடாது. 

போக்சோ சட்டம் சிறுமிகள் பாதுகாப்பிற்கு கொண்டு வரப் பட்டு உள்ளது. இந்த சட்டம் குறித்து மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். பாலியல் தொல்லை கொடுத்தால் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும்.

 இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments