தஞ்சையில் குருபெயர்ச்சி விழா !!

 

-MMH

        தஞ்சை மாநகரில் அமைந்துள்ளது திருவேங்கடம் நகர்  . அந்த நகரில் அமைந்துள்ள  சங்கட விநாயகர் ஆலயத்தில்  நேற்று வெகு விமர்சையாக குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.  உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக 4மணி முதல்  கலந்து கொண்டனர் .  

சுமார் நான்கு மணி அளவில் ஹோமம் வளர்க்கப்பட்டு  அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. 6.30 மணி அளவில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது . பூஜை மற்றும் ஹோமத்திற்கான பணிகளை ஆலய சிவாச்சாரியார் திரு ஞானசுந்தரம் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

இந்த நிகழ்வினை திரு ஸ்ரீராம் மற்றும் திரு ராஜசேகர் அவர்கள் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து  உபயதாரர்களை கவுரவித்தனர் . மேலும் விழாவின்  இறுதியில் அனைத்து பக்தர்களுக்கும் பல  விதமான அன்னதானங்கள் மற்றும் பிரசாதங்கள்  வழங்கப்பட்டன.

விநாயகர் மற்றும் குருபகவானை சிவாச்சாரியார் சிறப்பான முறையில் அலங்கரித்து இருந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments