சிங்கம்புணரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் கைது!
சிங்கம்புணரி கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் சோலைமலை (வயது20). இவர் அந்தப் பகுதியில் உள்ள பெண்களை தாக்குவது, திருட்டு மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
நேற்று முன்தினம் ஒருவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்று தீவிர விசாரணை செய்த சிங்கம்புணரி சார்பு ஆய்வாளர் குகன், வழக்குப்பதிவு செய்து சோலைமலையை கைது செய்தார்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments