கொட்டாம்பட்டி அருகே 'குடி' யால் கெட்ட குடி!!

 -MMH

கணவன் குடித்துவிட்டு வந்து அடிக்கடி  சண்டையிட்டதால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை அடுத்துள்ள மணப்பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் தினகரன். விவசாய கூலி வேலை செய்து வரும் இவருக்கும், சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திகாதேவி(25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்தத் தம்பதிக்கு தற்போது 4 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தினகரன் தினமும் மது அருந்திவிட்டு கார்த்திகாதேவியிடம் தகராறு செய்து வந்ததாகத் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கார்த்திகா தேவி, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திகா தேவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியப்பன் வழக்கு பதிவு செய்தார். மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

குடிப்பழக்கத்தால் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட மனவருத்தத்தின் விளைவு, இரண்டு குழந்தைகள் தாயை இழந்திருக்கிறார்கள்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments