மீட்கப்பட்ட குட்டி ஆண் யானைக்கு மீண்டும் பாதிப்பு..!!! வனத்துறையினர் தீவிர சிகிச்சை..!!

-MMH

              கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை துடியலூர் கதிர் நாயக்கன்பாளையம் CRPF பயிற்சி வளாகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு  தேடி வந்த குட்டி ஆண் யானை சில நாட்களாகவே மழையின் காரணமாக சேற்று பகுதியில் வலுகி சிறிய பள்ளத்தில் விழுந்தது.  வனத்துறையினர் CRPF காவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் ராஜேஷ்குமார் குழுவினர் உதவியோடு பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம்  சரி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட யானை தானாக எழுந்து வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றது. இந்நிலையில் அந்த குட்டி யானை கண்காணிப்பில் இருக்கும் என்று வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.

நேற்று பூச்சியூர் கிரீன் கார்டன் பின்புறம் உள்ள வனப்பகுதியில் சுமார் 250 மீட்டர் தொலைவுள்ள பட்டா நிலத்தில் புகுந்த யானை  உடல் நிலை சரி இல்லாமல் அங்கேயே படுத்து விட்டது. ஏற்கனவே வனத்துறையின் கண்காணிப்பில் இருந்து யானை உடனடியாக வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை அளிக்கப்பட்டும் யானை இன்னும் படுத்த நிலையில் இருப்பதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர் மேலும் யானை சரியாகும் வரை சிகிச்சையை தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-முஹம்மது சாதிக் அலி.

Comments