அதிமுக அரசு கொண்டுவந்த சட்டம் நியாயமற்றது!!

  -MMH

  கோவையில் பிற்படுத்தபட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வன்னியருக்கு 10. 5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்து இருந்த நிலையில் நீதிமன்றம் பேரணை வழங்கியிருக்கின்றது என தெரிவித்தார்.

பிற்படுத்தபட்ட ஆணையத்திற்கு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தலைவராக இருக்கின்றனர் என கூறிய அவர், கடந்த அதிமுக அரசு எந்த சட்டத்திற்கும் உட்படாமல் தேர்தலுக்காக, அரசியலுக்காக வன்னியருக்கு 10. 5 சதவீத இட ஒதுக்கீட்டை 1985 அம்பாசங்கர் அறிக்கையின் அடிப்படையில் வழங்கியது என தெரிவித்தார். பிற்படுத்தபட்டோர் சமூகத்தில் ஒரு அரசு உத்தியோகம் கூட பெறாத 28 சமூகங்கள் இன்னமும் இருக்கின்ற நிலையில் , கடந்த அரசு கொண்டு வந்த இந்த சட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்தார். எந்த புள்ளி விபரங்களும் இல்லாமல் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் 10. 5 சதவீதம் கொடுத்து அதிமுக அரசு கொண்டு வந்த சட்டம் நியாமற்றது என தெரிவித்த அவர்,

இந்த விவகாரத்தில் அதிமுக அரசும் அவரை தொடர்ந்து திமுக அரசும் பிழைகள் செய்து இருக்கின்றது என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பேராணை வழங்கி இருக்கின்றது என தெரிவித்த அவர்,

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அதை எதிர்த்து சட்டரீதியாக போராடுவோம் எனவும் தெரிவித்தார். விரைவில் தமிழகத்தில் 60 ஆயிரம் வேலை வாய்ப்பு உருவாக இருக்கின்றது என்றும் அந்த வேலை வாய்ப்பு பறிபோகமல் இந்த தீர்ப்பு தடுத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

இந்த முறை சரியாக கவனிக்காமல் விட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பிற்படுத்தபட்டோருக்கான அரசு வேலை வாய்ப்புகள் பறிபோகும் எனவும் தெரிவித்த அவர்,

இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்தக்க முயன்றும் சந்திக்க முடியவில்லை எனவும், பிற்படுத்தபட்டோர் கூட்டமைப்பினரை சந்திக்க இது வரை சந்திக்காதது வருத்தம் அளிக்கின்றது எனவும் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது அந்த அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்!

நாளைய வரலாறு செய்திக்காக,

- சீனி, ஹனீப்.

Comments