கோவை தனியார் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!!

   -MMH 

   கோவை தனியார் பள்ளி மாணவி தற்கொலை! மாணவியின் தற்கொலைக்கு காரணமான!ஆசிரியர் மீது போக்சோசட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மனித நேய ஜன நாயக கட்சி வலியுறுத்தல்!

கோவை மாவட்டம் தனியார் பள்ளியில் படித்து கொண்டிருந்த மாணவி  நேற்று மாலை தூக்கிட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த விசாரணையில்  அதே பள்ளியில் பணி செய்யும் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி, மீது  பல்வேறு விதமான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

மேலும் பள்ளி தலைமையாசிரியர் மீரா ஜாக்சன் அவர்களிடம் இது குறித்து புகார் அளித்தும் மிதுன் சக்கரவர்த்தி, மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆகவே அந்தப் பள்ளியிலிருந்து தன்னை மாற்றுமாறு மாணவி தனது  பெற்றோரிடம் கூறியதும், தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து மாணவி தற்கொலை செய்ததாகவும் பெற்றோர்கள் உறவினர்கள் கூறியுள்ளனர்.

ஆகவே சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஹெச்.அப்பாஸ் அவர்கள் கூறினார்கள்!!! 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments