தூத்துக்குடியில் கனமழை நீடிப்பு! - பஜார்கள் முக்கிய ரோடுகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதி!!

 

  -MMH

  தூத்துக்குடியில் கனமழை நீடித்து வருவதால் பஜார்கள் முக்கிய ரோடுகளில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, தனசேகரன்நகர் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி காணப்பட்டது. அதே போல் தருவை விளையாட்டு மைதானத்திலும் மழை நீர் தேங்கியது. மேலும் தூத்துக்குடி நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலைய பகுதி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடல்பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 249 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் பெரும்பாலான நாட்டு படகு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு;-

திருச்செந்தூர் - 50

காயல்பட்டினம் - 72

குலசேகரன்பட்டினம் - 77

விளாத்திகுளம் - 19

கடலாடி - 12

வைப்பாறு - 34

சூரங்குடி - 10

கோவில்பட்டி - 29

கழுகுமலை - 15

கயத்தாறு - 49

கடம்பூர் - 64

ஓட்டப்பிடாரம் - 54

மணியாச்சி - 43

வேடநத்தம் - 7

கீழஅரசடி - 19

எட்டயபுரம் - 31

சாத்தான்குளம் - 66

ஸ்ரீவைகுண்டம் - 13.1

தூத்துக்குடி - 18.2

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments