டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி எம்.எல்.ஏ சாலையில் அமர்ந்து போராட்டம் போக்குவரத்து பாதிப்பு!!

   -MMH 

   கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி  பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு விதமான  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கந்தசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை பல்லடம் செட்டிபாளையம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்;

டாஸ்மார்க் கடையை அகற்ற வலியுறுத்தி  தொடர் போராட்டங்கள் நடத்தியும் டாஸ்மாக் நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள் மேலும் டாஸ்மாக் மேலாளர் நேரடியாக வந்து கடையை அகற்றுவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

இந்நிலையில் போராட்டம் குறித்து தகவலறிந்த சூலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நீண்ட நேர சாலை மறியல் போராட்டத்தால் பல்லடம் செட்டிபாளையம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments