கோவையில் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதிய இணையதளம் துவக்கம்..!!

 

-MMH

        உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில், புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் http://www.covaidiabetes.com/எனும், இணையத்தளத்தை அறிமுகம் செய்தது.இதில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கலந்து கொண்டு மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த இணையதளத்தை துவக்கி வைத்தார். இது குறித்து ஏஜிஎஸ் ஹெல்த்கேர் இயக்குனர் டாக்டர் ஆதித்யா குகன்  கூறுகையில்,"உலக சர்க்கரை நோய் தினத்தை 1991ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனமும், சர்வதேச சர்க்கரைநோய் பவுண்டேஷன் இணைந்து உருவாக்கின.

சர்க்கரைநோயால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கவனத்தை கவரவும் இந்த நாள் உருவானது எனவும் கோவை சாய்பாபா காலனி பகுதியில் செயல்படும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையில், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த ஆர்வத்துடன் சிகிச்சை தரப்படுகிறது. இங்கு கண்டறியப்படும் இளம் வயது சர்க்கரை நோய் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களது குடும்பத்தினரின் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. பல லட்சம் இளஞர்கள் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பெறும் வகையில், புதிய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

கலந்துரையாடல் தரும் வகையில் இந்தியாவில் முதல் முறையாக இணையதள பக்கத்தை, இந்த உலக சர்க்கரை நோய் தினத்தில் அர்ப்பணிக்கிறோம் என்றார். தொடர்ந்து இந்த இணையத்தள பக்கமானது, அனைத்து கேள்விகளுக்கும் ஒலி வடிவிலான பதில்களை தரும். ( சர்க்கரை நோய் என்றால் என்ன என்பது முதல் அதனால் ஏற்படும் சிக்கல்கள் வரை). மக்கள் மனதில் உள்ள மூட நம்பிக்கை வரை பதில்கள் உள்ளன. இந்த இணையத்தள பக்கம். சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான உணவு முறைகள், அளவீடுகள் மற்றும் இருதயம்/ சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறைகள் பற்றி தரப்பட்டுள்ளன. மக்கள் தொகை, உடற்பயிற்சி இல்லாததால் ஏற்படும் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பற்றி அறிய வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments