போலீஸ் பவர்..!! திருடர்களை விரட்டி பிடிப்பதில் மாஸ் காட்டும் கோவை மாநகர போலீஸ்..!!! பிக்பாக்கெட் திருடனை விரட்டி பிடித்த சம்பவம் குவியும் பாராட்டு..!!

   -MMH 

  பிக்பாக்கெட் திருடனை விரட்டி பிடித்த சம்பவம் குவியும் பாராட்டு..!!சின்ன தடாகம் பகுதியில் பிட்பாக்கெட் திருடனை துரத்திப் பிடித்த போலீசார்

கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 35). இவர் கூலி தொழிலாளி. சம்பவத்தன்று நேற்று இவர் தன் சொந்த வேலையாக காந்திபுரம் பகுதிக்கு பஸ்ஸில் சென்று உள்ளார். வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் ஒரு நபர் இவர் அருகாமையில் இவரை உரசிக் கொண்டே வந்துள்ளார் பஸ் சின்ன தடாகம் வந்தடைந்த நிலையில் ராமனை உரசிக் கொண்டு வந்த நபர் ராமனை தள்ளி விட்டு கீழே இறங்கி வேகவேகமாக சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ராமன் தனது மேல் பாக்கெட்டை பார்த்த பொழுது தான் வைத்திருந்த 200 ரூபாய் பணத்தை காணவில்லை என்பதை அறிந்து திருடன் திருடன் என்று கத்தி இருக்கிறார். இவரின் சத்தத்தை கேட்ட அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் பிக்பாக்கெட் அடித்த நபரை துரத்திப் சென்று கையும் களவுமாக பிடித்து விட்டனர். 

பிடிபட்ட நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றங்களை குறைக்கும் வகையில் சமீபகாலமாக கோவை மாவட்ட போலீசார் தீவிரமான கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி குற்றவாளிகள் தப்பிக்கும் பட்சத்தில் அவர்களை விடாமல் துரத்திப் பிடிக்கும் நிகழ்வும் சமீபகாலமாக நடந்தேறி வருகிறது. இதுபோன்ற போலீசாரின் போற்றத்தக்க செயல் மக்களிடையே நிம்மதியும் பாராட்டையும் தேடித்தருகிறது என்று சமூக ஆர்வலர்கள் தம் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

-முகமது சாதிக் அலி.

Comments