வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் வால்பாறைக்கு ஒரு விடிவு கிடைக்குமா!! பொதுமக்கள் எதிர்பார்ப்பு !!

 

  -MMH

   கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இது பண்டிகை காலம் என்பதால் வால்பாறை நகர பகுதியில் மக்கள் கூட்டமும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நகரப்பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லாத நிலையில் நகர்ப்பகுதிகளில் நினைத்த இடத்தில் தாங்கள் வரும் வாகனங்களை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கவும், உணவு அருந்தவும் சென்றுவிடுகிறார்கள். 

இதனால் வால்பாறை நகரப்பகுதிகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் எனவே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-திவ்யா குமார், வால்பாறை.

Comments