'பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்க....' தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை கோரிக்கை!!
பெண்கள் ( சிறுமிகள் உட்பட) மீதான சீண்டல்களும், பாலியல் அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் அதன் நீட்சியாக பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும் சிறுமிகள் படுகொலை செய்யப்படுவதும் வேதனைக்குரியதாகும்.
தமிழகத்தில் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் பள்ளி வளாகங்களில் பத்மசேஷாத்திரி முதல் கோவை சின்மயா வரை எண்ணற்ற சிறுமிகள் பலியாகி உள்ளனர்.
சென்னை IIT மாணவி பாத்திமா உள்ளிட்ட அனைத்து பெண் பிள்ளைகளின் இறப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு பகிரங்கமாக தண்டனையை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
-ருசிமைதீன், தஞ்சாவூர்.
Comments