பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடி: சுட்டுப் பிடித்த போலீஸ்!!

   -MMH 

  மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யமுயன்ற ரவுடியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

அண்ணாநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளது. அப்போது அந்தப் பெண் கூச்சலிடவே, ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அப்போது 2 பேர் தப்பியோடிய நிலையில், எஞ்சிய 2 பேர் காவல்துறையினரை தாக்க முயன்றுள்ளனர். தற்காப்புக்காக ஒருவரை காவல்துறையினர் சுட்டதில் குருவி விஜய் என்பவரது காலில் காயம் ஏற்பட்டது.

குருவி விஜய்யுடன் மற்றொருவரையும் பிடித்த நிலையில், தப்பியோடிய 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சிங்ஹா நேரில் விசாரணை நடத்தினார்.

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணை நேற்று நள்ளிரவு ரவுடி குருவி விஜய் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அநத பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

இந்நிலையில், போலீசாரை பார்த்த குருவி விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றனர். உடனே போலீசார், குருவி விஜயின் காலில் துப்பாக்கியால் சுட்டதில் அவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவனையும், அவனது கூட்டாளிகளையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம்பட்ட குருவி விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-ருசி மைதீன், தஞ்சாவூர்.

Comments