தேசியம் தழுவிய சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்!

  -MMH

   இந்தியாவின் 75வது சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு துவங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தேசிய சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நவ. , 14 வரை நடக்கிறது. இதையடுத்து, 

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பள்ளி, கல்லுாரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பல்வேறு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அக். , 2 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில், கிராமப்புறம் மற்றும் நகர் பகுதி மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வாகன பிரசாரம் நேற்று துவங்கியது. 

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நீதிபதி சக்திவேல், வாகன பிரசாரத்தை நேற்று துவக்கி வைத்தார். இதில், அனைத்து நீதிபதிகள் பங்கேற்றனர். கிராமம் தோறும் பிரசார வாகனத்தில் செல்லும் சட்ட உதவி மையத்தின் ஊழியர், கிராம மக்களிடத்தில், இலவச சட்ட உதவி மையம் குறித்தும், நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது தொடர்பாகவும் துண்டு பிரசுரங்கள் வழங்குகிறார். பிரசார வாகனத்தில், வழக்கு சம்பந்தமாக, பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments