யூடியூப் சேனல் தொடங்கி சுயதொழில் தொடங்கலாம் என ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த பெண்! காவல்துறையினர் விசாரணை! !
கோவையை அடுத்த இருகூரை தலைமையிடமாக கொண்டு பெண்கள் மேம்பாட்டு அமைப்பை (சி.டபிள்யு.டி.எஸ்.) பெண் ஒருவர் நடத்தி வந்தார். இவர், தனது யூடியூப் சேனலில் காளான், நாப்கின், கற்பூரம், மண்புழு உரம் தயாரித்தல் உள்பட 21 வகையான சுய தொழில் தொடங்க எந்திரங்கள் வாங்கி தருவதாகவும், தயாரிக்கும் பொருட்களை தாங்களே வாங்கி கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி வீடியோ வெளியிட்டார்.
அதை நம்பி சுய தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையில் பலர் கூகுள்பே மூலம் ஆன்லைன் வழியாக அந்த பெண்ணுக்கு பணம் அனுப்பி உள்ளனர். இந்தநிலையில் அந்த பெண் இருகூரில் இருந்த அலுவலகத்தை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர் கொடுத்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக சேர்ந்து இருப்பதாகவும், இதுவரை ரூ.5 கோடி வரை மோசடி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.
Comments