பொது வெளியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

   -MMH 

  கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பொதுமக்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த சூழ்நிலையில் வால்பாறை பகுதியில் பள்ளி அருகிலும், தபால் நிலையம் அருகிலும், ப்ளே பாளையம் அருகிலும் குப்பைகளை பொதுவெளியில் கொட்டி விட்டு சென்றுள்ளார்கள்.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது மேலும் அப்பகுதியில் உலாவரும் சிங்கவால் குரங்குகள், மாடுகள், மற்றும் கால்நடைகள் இந்த குப்பைகளை கலைந்து மேய்ந்து வருவதால் குப்பைகள் சாலைகள் முழுவதும் சிதறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.

எனவே இதை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-திவ்யா குமார் (வால்பாறை) ,S.ராஜேந்திரன்.

Comments