கடலோர மாவட்டங்களில் வெள்ள அபாயம்!!

    -MMH 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம்தேதி தொடங்கியதிலிருந்து டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஐந்து தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. மேலும் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் கடலோர மாவட்டங்களான புதுச்சேரி காரைக்கால் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

நவம்பர் 3ஆம் தேதி கடலோர மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5  தினங்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால்  கடைமடைப் பாசனப் பகுதிகளான திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.


மேலும்  மேடான பகுதிகளில் இருந்து வெள்ள நீர் தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வலங்கைமான் வட்டம் 56 ரெகுநாதபுரம் ஊராட்சி மற்றும் மாணிக்க மங்கலம் ஊராட்சி பகுதிகளில் வெள்ளநீர் ஆனது கடல் போல காட்சியளிக்க காட்சியளிக்கின்றது. அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் நம்மிடத்தில் பேசும் பொழுது  கடந்த சில வருடங்களாக வாய்க்கால் பகுதிகளில் தூர்வாரப்படாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறுகின்றனர். எந்த ஒரு அதிகாரியும் அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதும் இல்லை நேரில் சென்று எந்த உதவியும் செய்வதில்லை என்று அந்தப் பகுதியின் மக்கள்  தங்களின்  மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.


மாணிக்க மங்கலம் ஊராட்சியை சேர்ந்த  விவசாயி திரு இளையராஜா அவர்கள் நம்மிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சில வீடியோக்களையும் புகைப்படங்களை அனுப்பினார். அவர் இந்த செய்தி தங்களது பத்திரிக்கையில்  வரவேண்டும். அனைத்து தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் வெளியாகி எங்கள் பகுதிக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்த காட்சிகளை காணும் போது நம் உள்ளம் பதைபதைக்கிறது. இயற்கை ஒருபுறம் விவசாயிகளை வஞ்சித்தாலும் அதிகாரிகள் அதை சரி செய்யும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் பெரிய இழப்பை  தடுக்க இயலும் என்பதை இதன் மூலம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments