கல்லூரி மாணவிக்கு தாய்மை அறக்கட்டளை உதவி!!

     -MMH 

விபத்தில் தந்தையை இழந்து தானும் அடிபட்டு சிகிச்சை பெற்ற கல்லூரி மாணவிக்கு தாய்மை அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளது. சில நேரங்களில் பிறர் செய்கின்ற தவறுகளுக்கு கூட நாம் தண்டனை அனுபவிக்க வேண்டியதாக உள்ளது என்பதே பெரும் சோகம்!தீபிகா இருபது வயதே ஆன B. Com PA  3 ஆம் ஆண்டு படித்து வரும் மாணவி. ஒரு வருடம் முன்பு தன் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சட்டென பின்னால் தாறுமாறாய் வந்த ஒரு கார்  அவர்களின் வண்டியை இடித்து தள்ளியது.

அதில் நிலை தடுமாறிய தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தீபிகா சுயநினைவில்லாமல் வீழ்ந்து விட, தன்னுடைய ஒரு கால் எலும்பு முறிந்து விட, ஒரு மாத காலம் சுயநினைவில்லாமல் சிகிச்சை பெற்று இருக்கிறார். இவர்களின் வாழ்வு எதிர்பாராத இந்த நிகழ்வால் தலைகீழானது. இடித்த வண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாமதமாய் நடைபெற்று வருகிறது. யாரோ ஒருவர் தவறுக்காக ஒரு குடும்பமே திண்டாடுகிறது. தந்தையை இழந்த வேதனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வரும் தீபிகா கல்வியை தொடர்ந்து படிக்க முயற்சிக்க,

தன்னுடைய கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தாய்மை அறக்கட்டளையின் உதவியை நாட, அவர் கொடுத்த தகவல்கள் விசாரித்து பிறகு தாய்மை அறக்கட்டளை சார்பாக 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், தாய்மை அறக்கட்டளையின் நலவிரும்பி  ஞானப்பிரகாசம் அவர்களுடைய பணியாளர்கள் தாய்மை அறக்கட்டளைக்கு சேவை பங்களிப்பாக அளித்த 2 ஆயிரம் ரூபாய் தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.7 ஆயிரம் நன்கொடையாக மாணவி தீபிகாவிற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கான தேர்வு கட்டணம் மற்றும் கல்வி கட்டணம் சேர்த்து  1 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டுமாறு மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கால் முழுமையாக குணம் பெறாமல் இருக்கும் மாணவியின் கனவு மெய்ப்பட உதவும் சேவை நெஞ்சங்கள்  நன்கொடை வழங்கலாம் என கோவை தாய்மை அறக்கட்டளை கேட்டு கொண்டுள்ளது. கனவு மெய்ப்படட்டும்!

மாணவிக்கு உதவ விரும்பும் நல்ல உள்ளங்கள் தாய்மை அறக்கட்டளை -மொபைல்  91591 58155 என்னும் நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் என அறக்கட்டளை நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- ஆர்.கே.பூபதி, கோவை.

Comments