தேர்வு எழுதும் வளாகத்துக்குள் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை!

   -MMH 

   ராணுவ பணிக்கு எழுத்து தேர்வு கோவை மாவட்டத்தில் 7 மையங்களில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. இதை 2, 329 பேர் எழுதுகின்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- "மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ராணுவ பணிக்கு எழுத்து தேர்வுகள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த தேர்வுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் 3 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

7 தேர்வு மையங்களிலும் வட்டாட்சியர் நிலையில் ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர், துணை வட்டாட்சியர் நிலையில் 11 துணை கண்காணிப்பாளர்கள், 196 அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்வு மையத்தை பார்வையிட மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முதன்மை தனி செயலர் நிலையில் அலுவலர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தேர்வை 2329 பேர் எழுதுகிறார்கள்.

தேர்வர்கள் நுழைவுச் சீட்டுடன் தேர்வு கூடத்திற்கு, ஒருமணி நேரத்திற்கு முன்பாக வந்து விடவேண்டும்.

தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்னதாக மையத்தின் வாயிற்கதவு பூட்டப்பட்டு விடும். எனவே அதன்பிறகு வரும் எந்த ஒரு தேர்வரும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வு மையத்துக்குள் மொபைல் போன், டிஜிட்டல் கைக்கடிகாரம், உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் எதையும் எடுத்து வரகூடாது.

அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டு உள்ளன. அங்கு தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டு உள்ளது.

தேர்வர்கள் கருப்புமை பந்துமுனைப் பேனா மட்டுமே பயன்படுத்த அறிவுறுத் தப்படுகிறது. அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும்.

தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உக்கடம், சிங்காநல்லூர், காந்தி புரம் மற்றும் பொள்ளாச்சி பஸ் நிலையங்களில் இருந்தும், வெளி மாநில மற்றும் மாவட்ட தேர்வர்களின் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது!!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments