நீண்ட நாள் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளுக்கு வந்த மாணவ மாணவியருக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு !!

  -MMH

   தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு பாதிப்பு குறைந்ததால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 

தற்போது  தொற்று பரவல் மேலும் குறைந்து இருப்பதால்  1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 

இதையொட்டி பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பள்ளிகள் சுத்தப்படுத்தப் பட்டு பள்ளி வகுப்பறை, வளாகம் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா கோலம் பூண்டது.  

மேலும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்த பிறகு பள்ளிக்குள் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளை முக மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்று வகுப்பறைக்கு அழைத்து சென்றனர்.

இதை தொடர்ந்து பாடங்கள் நடத்துவதை தவிர்த்து மாணவ- மாணவிகளுக்கு பொம்மலாட்டம், கதை, பாட்டு, நடனம் ஆடி உற்சாகப்படுத்தினர். 

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு இருந் தது. இதில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு பாரம்பரிய நடனமான கரகாட்டம் ஆடியும், கும்மி அடித்தும் மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனால் இங்கு வந்த மாணவர்கள் உற்சாகத்துடன் காணப் பட்டனர். இதுபோல இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஜமீன்முத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் வட்டார கல்வி அதிகாரி சின்னப்பராஜ் கலந்து கொண்டு பேசினார். தெற்கு ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர்கள் பிரசாந்த், எடிசன் பெர்னார்ட் ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 

ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர்கள் மகேஷ்வரன், ஜோசப் கருணாகரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று கல்வி மாவட்ட அதிகாரி ஆய்வு செய்தார். இனிப்பு வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments