கோவை தெற்கு தொகுயில் மறுவாக்கு நடத்த கோரிக்கை!!

   -MMH 

   ஹிந்துஸ்தான் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் ராகுல் காந்தி கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, நேற்று  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி !!

கோவை தெற்கு தொகுதியில் நான் போட்டியிட்டு தோல்வியை தழுவியது கூட தனக்கு, பெரிய வருத்தம் இல்லை ஆனால், தேர்தல் ஆணையத்தின் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்து வெற்றி பெற்ற வானதி சீனிவாசனின் வெற்றியை ஏற்று கொள்ள முடியாது என்று தெரிவித்தார், 

மேலும் கோவை தெற்கு தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்த வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை கையிலெடுத்து போராடி வருகின்றேன், இதற்காக பல்வேறு அவமானங்களை நான் கடந்து, மாவட்ட ஆட்சியர், தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் வரை சென்று மனு அளித்தேன். உரிய பதில் கிடைக்காத நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவும் செய்துள்ளேன், தனது வழக்கு விசாரணையை ஏற்று கொண்ட நீதிபதி பாரதிதாசன் தலைமையில், இந்த வழக்கு குறித்து முதற்கட்ட விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளதாக, தெரிவித்தார், இது சம்பந்தமாக அனைத்து நபர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் தெற்கு தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றாலும், இந்த வழக்கில் நான் வெற்றி பெறுவது உறுதி யாக உள்ளது என தெரிவித்துள்ளார், மேலும், தெற்கு தொகுதியில், வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்து உள்ளதை நான் டெக்னிக்கல் ரீதியாக நீதிபதி முன்பு நிரூபிக்க தன்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளது, என்று கூறிய அவர், தெற்கு தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்ற நம்பிக்கை தனக்கு 100 சதவிகிதம் இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!!

நாளைய வரலாறு செய்திக்காக,    

-ஹனீப் கோவை.

Comments