மதுக்கரையில் எரிக்கப்பட்ட நிலையில் எலும்பு கூடு!!

 

  -MMH

  கோவையில் எரிந்த நிலையில் எலும்புக்கூடு மீட்பு. பிரேத பரிசோதனையில் 40 வயது இளைஞர் என உறுதி. போலீசார் விசாரணை..

கோவை அருகே எரிந்த நிலையில் எலும்புக் கூடு மீட்கப்பட்டது. மருத்துவ பிரேத பரிசோதனை செய்த பின்பு 30 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருக்கும் வாலிபர் என உறுதி செய்யப்பட்டு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.   

மதுக்கரை மரப்பாலம் பகுதியில் மட்டத்துக்காடு சாலையில் நேற்று மனித எலும்புக்கூடு கிடந்தது. போலீசார் சென்று பார்த்தபோது, எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடு இருந்தது.

அருகே இரண்டு லைட்டர்கள், ஷூ காணப்பட்டன. தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயசிங் தலைமையிலான மருத்துவ குழுவினர், பிரேத பரிசோதனை செய்தனர்.

30-40 வயதுடைய ஆணின் எலும்புக்கூடாக இருக்கலாம் எனவும், ஒரு மாதத்துக்கு முன் சம்பவம் நடந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது. முக்கிய எலும்புகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

மதுக்கரை சுற்றுப்பகுதிகளில் யாரேனும் காணாமல் போனார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். எலும்புக்கூடு கிடந்த இடத்தில் சம்பவம் நடந்ததா, வேறு இடத்தில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளனர் !!

நாளையவரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments