மிரட்டி மிரட்டி கற்பழிக்கப்பட்ட மாணவி..!!! தற்கொலைக்கு முயன்றதால் அம்பலமான தொழிலாளியின் சூழ்ச்சி..!!!

   -MMH 

   அன்னூர் பகுதியில் அடிக்கடி மிரட்டி கற்பழித்தால் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது.

அன்னூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி இவர் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சரவண குமார் ( வயது 22) இவர்கள் இருவருக்கும் இடையே போன ஜனவரி மாதத்திலிருந்து பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறிய சூழ்நிலையில் சரவணகுமார் அந்த சிறுமியை அழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அதை வெளியே சொல்ல வேண்டாம் என்றும் மிரட்டியுள்ளார். இதே போல் அடிக்கடி சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சரவணகுமாரின் தொல்லை எல்லை மீறவே மன உளைச்சல் அடைந்த மாணவி நேற்று முன்தினம் பள்ளி கழிவறையில் கையில் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த ஆசிரியர்கள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று கேட்டு அறிந்ததில் தனக்கு நடந்த கொடுமையை தெரிவித்த சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்து போலீசார் சரவணகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

சமீப காலங்களில் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகி வரும் நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான அறிவுரைகள் வழங்கி அவர்களின் செயல்களை கண்காணிக்க வேண்டும் என்றும் பெண் குழந்தைகள் ஆகிய தங்களுக்கு ஏதாவது இதுபோன்ற கொடுமைகள் நடந்தால் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் இதைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்களிடத்தில் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-முகமது சாதிக் அலி.

Comments