தஞ்சையில் சில பகுதிகளில் நாளை மின் தடை!!

    -MMH

   தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின் பாதைகள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 16-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை நடைபெற உள்ளது. இதனால் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மின் பாதையிலிருந்து மின்வினியோகம் பெரும் மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகர், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆபிரகாம் பண்டிதர் நகர், ஆகிய பகுதிகளிலும் திலகர் திடல் மின் பாதையில் இருந்து மின் வினியோகம் பெரும் மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி சாலை, ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

வண்டிக்கார தெரு மின்பாதையில் மின்வினியோகம் பெரும் ரயிலடி, சாந்தபிள்ளை கேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெள்ளைப் பிள்ளையார் கோவில், சேவியர் நகர், சோழன் நகர், ஆகிய பகுதிகளிலும் சர்க்யூட் ஹவுஸ் மின் பாதையில் இருந்து மின் வினியோகம் பெரும் ஜி ஏ கெனல் சாலை, திவான் நகர், சின்னையா பாளையம், மிசன் சர்ச்சாலை, ஜோதி நகர், ஆடக்கார தெரு, ராதா கிருஷ்ணன் நகர், ஆகிய பகுதிகளிலும் 16ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் கீழவாசல் மீன் மார்க்கெட் மின் பாதையில் இருந்து மின் வினியோகம் பெரும் பர்மா பஜார், ஜுபிடர் தியேட்டர் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்என்எம் ரகுமான் நகர், அரிசி காரத்தெரு, கொள்ளு பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, ஆகிய பகுதிகளிலும் கீழவாசல் மின்பாதையில் பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தா பாளையம், கரம்பை சால கார தெரு, பழைய பஸ் நிலையம், கெண்டி ராஜபாளையம், ஆகிய பகுதிகளிலும் வ உ சி நகர் மின் பாதையில் இருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகளிலும் 16ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது.                                

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ருசி மைதீன்,  தஞ்சாவூர்.

Comments